சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் வைபவமானது பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 19.07.2025 ஆந் திகதி மாலை வேளையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அங்கு அடையாளம் காணப்பட்ட 34 பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸ்மா அதிபர் அவர்களால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் தனது சிறப்பான சேவைகள் மூலம் நாட்டின் ஒழுங்கை பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணிக்கும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைகளையும் பாராட்டியதுடன், அவர்களின் நலன்புரிகளுக்காக செயல்படுத்தப்படும் எதிகாலத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கினார்.
இந் நிகழ்வுக்காக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குனரத்ன அவர்களும், இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள மஹகிரில்ல அவர்கள், இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸ அவர்கள் மற்றும் மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.