Menu

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்.  

மாத்தறை மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுகளில் பதிவாகும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மாகாணத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று 29.08.2025 ஆந் திகதி மாத்தறை சனச மண்டபத்தில் நடைபெற்றது.

 

கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றம் அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையிலும் அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ரவி செனவிரத்ன அவர்கள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் மற்றும் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட தோடு கடமைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும்  பிரச்சனைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களின் நலன்புரிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

Scroll to Top