பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக 2025.08.25 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை சந்தித்தார்.
ஶ்ரீ ஜயவர்த்தனபுர விமானப் படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் புத்திக பியசிறி அவர்களால் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது, மேலும், இலக்கம் 43 வண்ணப் பிரிவினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கிடையில் நட்புரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது விமானப்படைத் தளபதி பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இச் சந்திப்பின் நினைவாக இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.