Menu

“சட்டத்தை பேணுவோம், சமாதானத்தைப் போற்றுவோம்” கீழ்  159 ஆவது பொலிஸ் தினம்.

ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு நீண்ட வரலாற்றுக்கு உரிமையுடைய இலங்கை பொலிஸ் 2025 செப்தெம்பர் 03 ஆம் திகதியன்று 159 ஆவது பொலிஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றது.

1866 செப்தெம்பர் 03 ஆம் திகதியன்று ஶ்ரீமத் ஜீ.டப்ள்யூ.ஆர் கெம்பல் அவர்கள் அரசியலமைப்பின் படி இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்ற தினமே பொலிஸ் தினமாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பொலிஸ்மா அதிபரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களில் 159 ஆவது பொலிஸ் தினம் கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகவே கருதப்படுகின்றது.

பொலிஸ் கடமைக்கு சமமான கடமைகள் நமது நாட்டில் மன்னராட்சி காலத்தில் இடம்பெற்றதாக வரலாற்று சான்றுகள் நினைவுக்கூறுகின்றன.

அரசாட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் இந் நாட்டை ஆக்கரமித்த போது பொலிஸ் கடமைகள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பதை பொலிஸ் வரலாற்றை அராய்ந்துப் பார்த்தால் பன்டைய தகவல்கள் மூலம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. 

எவ்வாறாயினும், 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்கள் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியப் பின்னர் 1650 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினால் இரவு நேர நகரப் பாதுகாப்புக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை  நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரத்தில் நகர ரோந்து நடவடிக்கைக்காக சிப்பாய்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர். இதுவே இலங்கையின் முதலாவது பொலிஸ் கடமையாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஒல்லாந்தர் பிரித்தானியரிடம் சரணடைந்த பின்னர் அன்றிலிருந்து பிரித்தானிய இராணுவத்தினரால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டது. பொலிஸ் மேற்பார்வைக்காகவும் மேலதிகப் பணிக்காகவும் அரச நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அப்போதைய ஆளுநரான பிறெட்ரிக் நோர்த் அவர்கள் பிரதம நீதியரசர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று பொலிஸ் மேற்பார்வை செய்யும் பொறுப்பை நீதவான் மற்றும் பொலிஸ் நீதியரசர்களிடம் ஒப்படைத்தார். இலங்கையை கைப்பற்றிய சிறிது காலத்திலேயே பொலிஸ் தொடர்பான சட்டம் முதன் முறையாக பிரித்தானியர்களால் நிறைவேற்றப்பட்டது.   மேலும்  கிராமப் பொலிஸ் என்று பெயரிடப்பட்டு 1806 ஆம் ஆண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகளையும் நியமித்து அவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என கட்டளையிடப்பட்டது. தங்கள் பொறுப்பிலுள்ள பிரதேசங்களில் சமாதானத்தை நிலைநாட்டி குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பும் அவர்களுக்கே வழங்கப்பட்டது.

மேலும், 1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தை திருத்தியமைத்ததன் பின்னர் பொலிஸ் படையணித் தலைவரின் பதவிநிலையான பிரதான பொலிஸ் அத்தியட்சகர் என்ற பதவிநிலைக்கு நியமிப்பதற்காகவும் நாடளாவியரீதியில் பொலிஸ் துறையை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் ஆற்றல்மிக்க நபர் ஒருவரை தேடிய ஆளுநர் பிறெட்ரிக் நோர்த் அவர்கள் இந்தியாவில் பொலிசார் கடமையாற்றும்  முறைமையையும் கண்காணித்தார். மும்பாய் பொலிசில் “இரத்னகிரி ரேஞ்சர்ஸ்” பொறுப்பில் இருந்த ஶ்ரீமத் ஜீ.டபிள்யூ.ஆர் கெம்பல் அவர்களிடம் இப் பொறுப்பை ஒப்படைக்குமாறு மும்பாய் ஆளுநர் அவர்கள் பரிந்துரை செய்தார்.

ஆளுநர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீ.டபிள்யூ.ஆர் கெம்பல் அவர்கள் பிரதான பொலிஸ் அத்தியட்சகராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன் பின்னர் 1866 ஆம் ஆண்டு செப்தெம்பர் 03 ஆந் திகதியன்று அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு பிரதான பொலிஸ் அத்தியட்சகர் என்ற பதவிநிலையை பொலிஸ்மா அதிபர் எனப் பெயர் மாற்றப்பட்டது. அன்றைய தினமே பொலிஸ் தினமாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

1843 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருந்த பொலிஸ் கட்டளைச் சட்டத்தை இரத்து செய்த பின்னர் நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்காக ஆளுநர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு,  பொலிஸ் பரிசோதகர் பதவிநிலையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டதுடன், பொலிஸ் பியோன் (சேவகன்) பதவிநிலையை இரத்து செய்து பொலிஸ் கான்ஸ்டபிள் என்ற பதவிநிலையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

1870 ஆம் ஆண்டில் அதிகளவிலான வணிகக் குற்றங்கள், மர்மக் கொலைகள் மற்றும் பல குற்றங்களின் இரகசியங்களை கண்டறியும் நோக்கத்துடன் சிவில் உடையுடன் கண்காணிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தினர்.

1891 ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபர் பதவியை பொறுப்பேற்ற மேஜர் நோலிஸ் அவர்களால்  குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) ஆரம்பிக்கப்பட்டது. அத் திணைக்களத்தின் முதலாவது பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் கொத்தலாவல அவர்கள் பொலிஸ்மா அதிபர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை பிரஜையான ஶ்ரீமத் றிச்சட் அலுவிஹாரை அவர்கள் பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற முதலாவது சந்தர்ப்பமாக கருதப்படுவதுடன்,  அவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதியன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய காலத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதுடன் பொலிஸ் படையணி அதன் காலணித்துவத்திலிருந்து தேசிய பொலிஸ் துறையாக விரிவுப்படுத்துவதற்கான பாரிய பொறுப்பு ஶ்ரீமத் றிச்சட் அலுவிஹாரை அவர்களுக்கு சுமத்தப்பட்டது. அதன் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்புரிகள், விசாரணைகள், குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்புச் சங்கங்கள், கிராமிய தன்னார்வுச் சேவை, பொதுமக்கள் நற்புறவு மற்றும் புதிய பயிற்சி விதிமுறைகள் ஆகிய நலன்புரிகளை மேம்படுத்துதல் போன்ற பெறுமதிமிக்க பொறுப்புகளை இலங்கை பொலிஸ் துறைக்காக அவர் சிறப்பான சேவைகளையும் செய்துள்ளார். 

குற்றங்களைத் தடுப்பதற்காக உலகத்தில் விசேட நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும் பொலிஸ் மோப்ப நாய்களின் கடமையானது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாடு பூராகவும் 54 அலகுகளில் அதிகளவிலான பொலிஸ் மோப்ப நாய்களினூடாக குற்றவியல் விசாரணைகள், போதைப் பொருள் மற்றும் வெடிப்பொருள்களை அடையாளம் காட்டுதல் போன்ற கடமைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குவதில் வெற்றிகளையும் கண்டுள்ளது.

இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன்,  1952 ஆம் ஆண்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிநிலை வரை தங்களது சிறப்பான சேவையை செய்து வருகின்றனர். 1979 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகமானது அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சிறந்தமுறையில் நிறைவேற்றி வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டில் அப்போதைய பொலிஸ்மா அதிபர் சந்திரா பிரனாந்து  அவர்களின் முயற்சியால் குற்றங்கள் நடந்த இடத்தை பரிசோதனை செய்வதற்காக  அதாவது பொலிசாருக்கு கிடைக்கப் பெறும் குற்றங்களை கையாளுவதற்காக குற்றம் நடைபெற்ற இடத்தை பரிசோதனைக்குற்படுத்தும் உத்தியோகத்தர்கள் (SOCO) என்று பெயர் சூட்டி ஸ்வீடன் பொலிசாரால் விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டு இப் பிரிவு  ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியைப் பெற்ற உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் 43 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளில் இணைக்கப்பட்டு குற்றம் இடம்பெற்ற இடத்தினை பரிசோதனைக்குற்படுத்தும் கடமைக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கல்லூரியினூடாக வழங்கப்படும் பயிற்சிக்கு மேலதிகமாக பொலிசின் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக 1978 ஆம் ஆண்டில் பொலிஸ் உயர் பயிற்சி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அறிவியல் பீடமாகவும் பின்னர் 2011 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் தேசிய பொலிஸ் கல்வியற் கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வியை வழங்கி எதிர்காலத்தில் பொலிசார் பட்டப்படிப்பினை கற்கும் நோக்கத்துடன் பாதையை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

1983 ஆம் ஆண்டு பொலிஸ் விசேட ஆயுதப் படையாக, பிரித்தானிய SAI உத்தியோகத்தர்களிடம் பயிற்சிகளைப் பெற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையாக இணைந்தது “உறுதியான வெற்றி” என்ற தொணிப்பொருளின் கீழ் ஆகும். பொலிஸ் விசேட அதிரடிப் படை தற்போது திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போதைப் பொருள் சுற்றிவளைப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட படையானது தனது கடமையினை துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றது.

1866 இலிருந்து 2025 வரை 37 பொலிஸ்மா அதிபர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை பொலிஸ் துறை அதன் சட்ட கட்டமைபிற்குள் இருந்தாலும் பொதுமக்களின் சேவையை திறன்பட முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றங்கள், போதைப் பொருள்கள், வீதி விபத்துகள் மற்றும் முறையற்ற ஆட்சிகளுக்கு எதிராக 24 மணித்தியாலங்கள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்காக 86000 பொலிசார் பொலிஸ் விசேட அதிரடிப் படை அடங்களாக  அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். நாடுபூராகவும் பொலிஸ் கடமையை மேற்கொள்வதற்கு 30000 பொலிஸ் உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ளதாக தற்போதைய பொலிஸ்மா அதிபர் அவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 608 பொலிஸ் நிலையங்களும், 45 பிரதேச பொலிஸ் பிரிவுகள் மற்றும் 78 செயல்பாட்டு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றது. மறுசீரமைப்பு செய்யப்பட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் கடமைகள் பொலிஸ் நிருவாகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் புதிய பரிமாணத்தையும் பெற்றுள்ளது.  இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள சில பிரிவுகளினூடாக நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பயணத்தில் குற்றங்கள் மற்றும் ஊழல்களை தடுப்பதற்காகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பயன்படுத்தப்பட்ட நுட்பமான முறைகள் ஊடாகவும் புதிய தொழில் நுட்பங்களுடன் மிகவும் திறமையான பொலிஸ் சேவைகளை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் முகம் கொடுக்கும் பல்வேறு ஆபத்திலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும் பயம் மற்றும்  சந்தேகத்திற்கு இடமின்றி தனது சொத்துக்களை பாதுகாக்ககூடிய சிறந்த சமூக சூழலை உருவாக்குவதற்காகவும் இலங்கை பொலிசில் புதிய தொழிநுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமாக கைவிரல் அடையாளத்தை பரிசோதிக்கும் முறைகளும் (AFIS), சந்தேகநபர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அடங்கிய (AMIS) முறைமைகளும் அறிமுகப்படுத்தியுள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை தடைசெய்யும் நோக்கத்துடன் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமாநிலைய வளாகத்தில் சந்தேகநபர்களின் முகத்தை அடையாளம் காணும் அமைப்பும் (ARFS) நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் சந்தேகநபர்கள் மாறுவேடங்களில் இந் நாட்டிற்கு வருகைத்தரும் போது அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

பெருந்தெருக்களில் ஏற்படும் வீதி விபத்துகள் மற்றும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும் போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருவதோடு வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் வீதி பாதுகாப்புகள் தொடர்பான நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இத் திட்டங்களுக்கமைய 24 மணித்தியாலங்களும் கொழும்பு நகரில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்களை CCTV தொழில்நுட்பத்தினூடாக கண்காணித்து வருவதுடன், குற்றங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றனர்.

தற்போதைய பொலிஸ்மா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஊடாக வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கான ஒழுங்குமுறை திட்டமானது (Go Pay) தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை பொலிசில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 119 எனும் அவசர அழைப்புச் சேவைக்கு மேலதிகமாக 107 என்ற புதிய அவசர அழைப்பு சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சேவையானது தமிழ் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் முறையிடுவதற்கான வசதிகளையும் இலங்கை பொலிஸ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  அதேபோன்று நாடளாவியரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு உடனடி உதவியை வழங்குவதற்காக 109 என்ற அவசர அழைப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இதனூடாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்களை விரைவாக முறையீடுவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இந் நடவடிக்கையானது 24 மணிநேரமும் பெண் பொலிசார் சேவையில் அமர்த்தப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

பொலிசில் தற்போது நடைமுறையிலுள்ள மற்றுமொரு தனித்துவமான சேவையாக “பொலிஸ்மா அதிபருக்கு கூறுங்கள்” (TELL IGP) என்ற இணையத்தள சேவையைக் குறிப்பிடலாம். இதற்கான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக www.police.lk என்ற பொலிஸ் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை அணுகிய பின்னர்  E-Services ஐ க்ளிக் செய்து Online Complain என்பதை அணுகுவதன் ஊடாக குறித்த முறைப்பாட்டை நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிப்பதற்கான இயலுமை பொதுமக்களுக்கு உள்ளது. பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் கடமையை பொறுப்பேற்றதற்கமைய பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு Whatsapp ஊடாக குறுஞ்செய்தி மூலம் முறையீடுவதற்காக 071-8598888 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தியமை விசேட அம்சமாகும்.

ஒவ்வொரு நபரும் தங்களுக்கு விருப்பமான தொழில் அல்லது வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தாலும் அத் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தடையகற்றல் அறிக்கையைப் பெறுவது அத்தியாவசிய விடயமாகும். அவற்றை பெற்றுகொள்ளும் நபர்களுக்கு மிகவும் செயல்திறனுடன் கூடிய அறிக்கையை வழங்குவதற்காக நிகழ்நிலை (Online) ஊடாக வழங்கப்படும் வசதிகளையும் மேலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  இதனூடாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இதனூடாக வழங்கப்படும் சேவையானது மகத்தான சேவையாகும்.

அதேபோன்று இலங்கை பொலிஸ் உத்தியோகப்பூர்வ இணையத்தளம், யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பொலிசார் பொதுமக்களுக்கு தகவல்கள் மற்றும் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.   இதனூடாக பொதுமக்களுடன் நெருங்கிய உறவை பேணுவது மாத்திரமின்றி நாட்டில் ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்கொள்கின்றனர். மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன்  இலங்கை பொலிஸ் உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் பத்திரிகையான 119E எனும் செய்தித்தாள் ஒவ்வொரு மாதமும் பொலிசாரின் பயன்பாட்டிற்காக பொலிஸ் ஊடகப் பிரிவின் ஊடாக  வெளியிடப்பட்டு வருகின்றன.

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்நது பொலிஸ் தொலைநோக்கு பார்வையாக குற்றங்கள் மற்றும் வன்முறைகளற்ற அமைதியான சூழலை உருவாக்குவதற்காக  முன்னின்று செயல்பட்டு வருவதுடன், கடந்த காலத்தின் பொலிஸ் துறையின் பெருமையை மீட்டெடுப்பதற்காக குற்றவியல் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் ஊடாக பொலிஸ் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குதலின் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் போன்றவை மிகக் குறுகிய காலத்தில் தீர்ப்பதற்கு கனிஷ்ட, பரிசோதகர்கள் தரத்திலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவேற்றுத் தரங்களில் SOR அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்தல், அவர்களின் நலன்புரிகளுக்காக பொலிஸ் நிலைய மட்டத்தில் நலன் திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் சிறந்த முறையில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பரிசில்கள் மற்றும் பாராட்டுதல்களும் வழங்குவதற்கான புதிய முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளனர். மேலும், தகுதியற்ற உத்தியோகத்தர்களை அடையாளம் காண்பதற்காக புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், பொதுமக்களுகான தினத்தை  ஒவ்வொறு வியாழக்கிழமைகளிலும் நடாத்துதல், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது குறைகேள் பிரச்சனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்னர். பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கத்தை மிகச் சிறந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக ஊழல் செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குவதும், பொலிஸ் துறைக்கு கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பதற்காக புதிய பொலிஸ்மா அதிபர் அவர்களின் முயற்சியாக கருதப்படுகின்றது.

159 ஆண்டுகாலமாக சமூகத்தை ஒன்றினைத்து செல்லும் பொலிஸ் பயணத்தில் சாதாரண பொலிஸ் கடமையினை மேற்கொள்ளும் போது மற்றும் செயல்பாட்டுச் சேவைகளில் ஈடுபடும் போது தங்களது உயிர்களை தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நீண்ட காலச் சேவைகளுக்குப் பின்னர் ஓய்வுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் பெருமையுடன் நினைவு கூறுவதோடு இதுவரையிலான பயணத்தைத் தோளில் சுமந்து, இரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் உயிர் தியாகத்தால் நிறைவேற்ற  முடியாத இப் பணியை 159 ஆவது பொலிஸ் தினத்தன்று கொண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த பெருமையுடன் அனைவரையும் நினைவுக் கூறுவோம்.

 

Scroll to Top