நாடளாவிய ரீதியில், அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்கள் திஸ்ஸ வாவியை பார்வையிட்டு அதில் நீராடுவதை பெரிதும் விரும்புகின்றனர். இருப்பினும், விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துவரப்பட்டபோதிலும், வாவியின் வளாகத்திற்கு வருபவர்கள் குப்பைகளை ஏரிக்குள் வீசும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால், திஸ்ஸ வாவி சுற்றுவட்டாரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், வாவி வளாகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை முறையாக அகற்றும் சிரமதானம் 2025 செப்டம்பர் 20 அன்று அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு திலிண ஹேவா பத்திரன அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த சிரமதான செயற்பாடு, அனுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், அப்பிரிவின் கீழ் பயிற்சி பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் திஸ்ஸ வாவி பகுதியில் உள்ள நடமாடும் விற்பனையாளர்கள் தங்களது விருப்பத்துடன் இதில் பங்கேற்று ஆதரவு வழங்கினர்.