159வது தேசிய பொலிஸ் தினத்தினை முன்னிட்டு, மாத்தளை பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பு பிரிவினால், சமூகத்தை மையமாகக் கொண்ட ஒரு தொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அடங்கிய பிரதேசங்களில் வாழும், முழங்காலுக்கு கீழாக இரு கால்களையும் இழந்தும் ஆதரவின்றி வாழும் II மாற்றுத்திறனாளிகள் சுயமாக அங்கம் இயக்கக்கூடிய செயற்கைக் கால்கள் பெறுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்த உதவிகள் தானமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, மாத்தளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.கே. விக்கிரமநாயக அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி, மாத்தளை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில், மாத்தளை மாவட்டம் II உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.சி.ஆர். தென்னகோன், சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த விஜேபண்டார, மற்றும் பல பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு, விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
இத்திட்டத்திற்காக, ரூபாய் 6 இலட்சம் நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளன.
மேலும், இந்த செயற்கைக் கால்கள் வழங்கும் திட்டத்திற்கு சமூக ஆதரவை வழங்கிய கண்டி போ ஹென்டிகெப் நிறுவனம் சார்பாக, அதன் பிரதான கட்டளை அதிகாரி எஸ்.எஸ். அத்தநாயக மற்றும் பிரதான தொழில்நுட்ப அதிகாரி சிசிர குமார ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுகள், பொலிஸாரின் சமூகப்பணிக்கு எதிரொலியாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.