Menu

பொலிஸ் குதிரைப் படைப் பிரிவு

செயல் நோக்கு
கவர்ச்சிகரமான நற்புமிக்க சேவையின் ஊடாக இலங்கை பொலிசின் பெருமிதத்தையும், கௌரவத்தையும் உயர்த்துதல்.

செயற் பணி
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும்,  இலங்கை பொலிசின் பெருமிதத்தையும் பெருமை மற்றும் புகழையும் உயர்த்துவதும், அரச நிகழ்வுகள், வீதி போக்குவரத்துக் கட்டுபாடுகள் போன்ற பொலிஸ் கடமைகள் பொலிஸ் குதிரைப்படையின் பங்களிப்பாகும்.  

வரலாறு

  • 1921 ஆம் ஆண்டு கொழும்பு மிஹிந்து மாவத்தையில் பொலிஸ் குதிரைப் படை அலகானது ஸ்தாபிக்கப்பட்டது.
  • பிரித்தானியர்களின் ஆட்சிகாலத்தில் உயர் பதவிகளை வகித்த சில உத்தியோகத்தர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பிரிவானது பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த சில ​சார்ஜன்ட்களை ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இப் பிரிவுடன் இணைத்து நிறந்தர குதிரைப் படை பொலிஸ் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது.
  • இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர் பொலிஸ் திணைக்களம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொலிஸ் குதிரைப் படையை விசேடப் பிரிவாக மாற்றப்பட்டது. அப்போதைய பிரித்தானிய உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இலங்கை பிரஜைகளிடமிருந்து உப பொலிஸ் பரிசோதகர்கள் பதவிக்கு மூவர் தேர்தெடுக்கப்பட்டு இச் சேவையில் இணைக்கப்பட்டனர்.
  • 1956 இன் பின்னர் இலங்கை பொலிசில் இலங்கை பிரஜைகள் முழுமையாக இணைக்கப்பட்டு, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன்ட் இருவர் மற்றும் 22 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இக் கடமைக்காக ஈடுபடுத்தினர். அவுஸ்திரேலியா நிறுவனமொன்றிலிருந்து 23 குதிரைகளை கொள்வனவு செய்து சேவையில் இணைத்ததுடன் பொலிஸ் குதிரைப் படைப் பிரிவை மேலும் முன்னேற்றம் செய்தனர்.
  • பின்னர் படிப்படியாக முன்னேற்றம் கண்ட பொலிஸ் குதிரைப் படைப் பிரிவானது 1985 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • அன்றிலிருந்து இன்று வரை பொலிஸ் குதிரைப் படைப் பிரிவு வளர்ச்சியடைந்து தற்போது 36 குதிரைகளுடன் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளிலும் பொலிஸ் குதிரைப் படை அலகு செயல்பட்டு வருகின்றது.

பொலிஸ் குதிரைப் படை பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் கடமைகள்.

  • தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது சனாதிபதி அவர்களுக்கு முன்பாக மரியாதை அணிவத்துச் செல்லுதல் மற்றும் அணிவகுப்பு செய்யும் போது குதிரை படையணியை ஈடுபடுத்துதல்.
  • வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு முன்பாக குதிரைப்படை மரியாதை அணிவகுத்து செல்லுதல்.
  • இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வின் போது குதிரைப் படை அணிவகுப்பு செலுத்துதல்.
  • பொலிஸ் தின நிகழ்வில் பிரதான விருந்தினர்களுக்கு குதிரைப் படை அணிவகுப்பும், அணிவகுப்பு மரியாதையும் செலுத்தும் போது இக் குதிரைப் படைப் பிரிவையும் இணைத்துக்கொள்ளப் படுகின்றனர்.
  • கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதான நகரங்களை மையமாகக் கொண்டு போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் போது குதிரைப் படையை அணிவகுப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • கண்டி எசல பெரஹெர நிகழ்விலும் பொலிஸ் குதிரை படையணி முக்கிய பங்கு வகிக்கின்றது
Scroll to Top