செயல் நோக்கம்
ஒழுக்கத்தையும் சட்டத்தையும் மதிக்கும், நேர்மறையான எண்ணத்துடன் துடித்துடிப்பான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதன் ஊடாக சகல மக்களை பாதுகாப்பாக வாழவைக்கும் நோக்கத்துடன்.
செயற் பணி
இலங்கை பாடசாலைகளிலுள்ள அன்பு மாணவ மாணவிகள் ஒழுக்கத்துடனும், சிறந்த மனப்பாண்புகளைக் கொண்ட ஆளுமையுடனும், சிறந்த தலைவனாகவும் எதிர்கால சாவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய திறமையான இளைஞர் சமூதாயத்தின் ஊடாக நாட்டின் நிலையான அபிவிருத்தியை உருவாக்கும் முகமாக தன்னை அர்ப்பணித்தல்.
வரலாறு
1972 ஆண்டு இலங்கை சனநாயக நாடாக மாற்றம் பெற்றப் பின்னர் அப்போதைய பிரதம மந்திரியின் அறிவுரைக்கமைய பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட ஸ்டேன்லி சேனாநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழிருந்த இலங்கை பொலிஸ் திணைக்களமானது கல்வி அமைச்சுடன் இணைந்து மலேசியா பொலிஸ் மாணவப் படையணியைப் பின்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பொலிசாருக்குமிடையில் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, தற்போதைய இளைஞர் சமூதாயத்தை உணர்வுத்திறன் மிக்கதாகவும், ஆரோக்கியமான சிறந்த தலைமுறையாக உருவாக்குவதற்கான எதிர்ப்பார்ப்புகளுடன் இலங்கை பொலிஸ் மாணவர் படையணி சேவை 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி கொழும்பு லொன்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள விஷேட பொலிஸ் உபசேவை தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸ் மாணவ படையணி உருவாக்கமும் மறுசீரமைப்பும்