Menu

இலங்கையின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய அவர்கள் பொறுப்பேற்றார்

இந் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு உறுதிப்பூண்டுள்ள இலங்கை பொலிஸ் துறைக்கு, சிறந்த தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலை, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக தனது கடமையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.  

பொலிஸ்மா அதிபர், கொழும்பு 02 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மறியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டதுன், பௌத்த மதகுருமார்கள் மற்றும் பிற மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் சுப நேரத்தில் தனது கடமையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளார். 

புதிய பொலிஸ்மா அதிபர் நிகழ்வில் உரையாற்றியபோது, தனது பல ஆண்டுகால பொலிஸ் சேவையில் எதிர்கொண்ட சவால்களையும், சேவைக்கான அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்தார். மேலும், குற்றங்களை ஒழிக்க புதிய செயல்முறைகளை முன்னெடுத்து, பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையேயான நம்பிக்கையை மீட்டெடுத்து, பொலிஸ் சேவையை மேலும் மதிப்புமிக்க, மக்களிடம் செவிகொடுக்கக்கூடியதாக மாற்றங்களை ஏற்படுத்தும்  நோக்கத்துடன், தேவையான மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் உறுதி அளித்தார்.

Scroll to Top