Menu

பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025.08.25 ஆம் திகதி காலை, பாதுகாப்பு அமைச்சில் இந் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப்பெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ் சம்பத் துய்யகொந்தா அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

பொலிஸ்மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இச்சந்திப்பின் போது, பொலிஸ்மா அதிபர் அவர்களால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர் அவர்களும், பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

Scroll to Top