covi 1ops roommedia

CH&FC அணிக்கு எதிரான போட்டியில் பொலிஸ் விளையாட்டு கழகம் அபார வெற்றி

 பம்பலப்பிட்டி பொலிஸ் பூங்கா மைதானத்தில் ஜனவரி 03 ம் திகதி நடைபெற்ற முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 5வது வாரத்துக்கான போட்டியில் தங்களது சொந்த மைதானத்தின் சாதகத்தை பயன்படுத்திக் கொண்டு ஆடிய பொலிஸ் விளையாட்டு கழக அணி CH&FC அணிக்கு எதிரான போட்டியில் 36 – 22 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது

ஆட்டத்தின் முதற்பாதியில் CH&FC அணி 10-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியில் தங்களுடைய ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்ட பொலிஸ் அணி மொத்தமாக 6 ட்ரைகள், 3 கன்வேர்சன்கள் ஊடாக 36 புள்ளிகளை குவித்து இலகு வெற்றி பெற்றது

இப் போட்டியின் Dialog VIU Player of the Match விருது பொலிஸ் விளையாட்டு கழக அணியின் தலைவரான இரோஷன் சில்வாவிட்கு வழங்கப்பட்டது.