ops room

2020 இல் முதலாம் தரத்தில் இணைந்து கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்புச் செய்தல்.

2020 இல் முதலாம் தரத்திற்கு இணையவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்காக புத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு பொலிஸ் குடும்ப நலன்புரி சங்கம் மற்றும் பொலிஸ் மகளிர் சேவை பிரிவின் பதில் தலைவி பிரசாந்தி பிரனாந்து அவர்களின் தலைமையின் கீழ் 2020.01.07 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பொலிஸ் குடும்ப நலன்புரி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

பிள்ளை ஒன்றுக்கு முதலாம் வகுப்பிற்கு தேவையான அனைத்து புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள், புத்தகப்பை 01, தண்ணீர் போத்தல் 01, சாப்பாட்டுப் பெட்டி 01 என்றவாறு நாடு முழுவதிலும் உள்ள 4200 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டதுடன் இதற்காக செலவழிக்கப்பட்ட மொத்த பணம் ரூபாய் 8500,000/= ஆகும். புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு நிதி பங்களிப்பை பொலிஸ் மா அதிபர் ஏற்றதுடன் புத்தகப் பை மற்றும் ஏனைய உபகரணங்களுக்கான நிதி பங்களிப்பை பொலிஸ் குடும்ப நலன்புரி சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பொலிஸ் நலன்புரி மற்றும் வைத்திய சேவை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. சஞ்ஜீவ தர்மரத்ன உட்பட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் குடும்ப நலன்புரி சங்கம் மற்றும் பொலிஸ் மகளிர் சேவை பிரிவின் உறுப்பினர்கள், 100 பிள்ளைகளுடன் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

View the embedded image gallery online at:
https://www.police.lk/index.php/item/623-2020#sigFreeIdace7ef772a

news

1

1

sports news

special events1


Emergency: 119,

IG's Help Desk
+94 11 2444480
+94 11 2444483

Police Headquartes:
+94 11 2421111

Child & Women Bureau:
+94 11 2444444

Information Room:
+94 11 2854931