covid ops

2019 - 68 வது தேசிய உயிர் காக்கும் போட்டியில் ஒட்டுமொத்த போட்டியிலும் பொலிஸ் மீட்புக் குழு வெற்றி.

இலங்கை உயிர் காக்கும் சங்கத்தினால் தொடர்ச்சியாக 68 ஆவது முறையும் நடாத்தப்பட்ட உயிர் காக்கும் தேசிய மற்றும் தேர்ச்சிப்பெற்றவர்களின் போட்டிகள் 2019 டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ம் திகதிகளில் கொழும்பு என்.சீ.சீ. நீச்சல் தடாகத்திலும், கல்கிசை கடற்கரையிலும் நடைபெற்றது.

நாடு முழுவதும் பிரசித்திப்பெற்ற 9 உயிர் காக்கும் விளையாட்டு குழுக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப் போட்டியில் இலங்கை பொலிஸ் உயிர் காக்கும் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40 ஆண் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 4 குழுக்களாக பங்கேற்றனர். தேசிய போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், உயிர் காக்கும் தேர்ச்சிப்பெற்றவர்களின் போட்டிகள் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பொலிஸ் உயிர்காக்கும் குழு வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

அதன்படி இலங்கை பொலிஸ் உயிர் காக்கும் குழுக்கள் (A/B) இரண்டும் ஒட்டுமொத்த போட்டிகளிலும் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் இந்த போட்டியில் 06 வது தடவையாகவும் இலங்கை பொலிஸ் உயிர் காக்கும் அணி வெற்றி கண்டுள்ளது.

igp

C.D. Wickramaratne
Inspector General of Police

media

media briefing

1

sports news

special events1

w01

02

01

 


Emergency: 119,

IG's Help Desk
+94 11 2444480
+94 11 2444483

Police Headquartes:
+94 11 2421111

Child & Women Bureau:
+94 11 2444444